Take a photo of a barcode or cover
"ஜாதியை அழித்தொழிக்கும் வழி" புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அம்பேத்கரின் கருத்துக்கள் !
"சாதி அமைப்பை உடைக்க உண்மையான வழி சமபந்தி விருந்துகளோ, கலப்பு திருமணங்களோ அல்ல சாதியை தோற்றுவிக்க காரணமாக உள்ள மதக் கோட்பாடுகளை ஒழிப்பதே"
லாகூர் ஜாத்-பட்-தோடக் எனும்
சாதி இந்துக்களின் சமூக சீர்திருத்த அமைப்புக்காக அம்பேத்கர் தயாரித்த உரையில் அடங்கிய வரிகள் இவை. அந்த அமைப்பு நடத்தும் சமூக சீர்திருத்த கருத்தரங்க மாநாட்டின் தலைமை பொறுப்பு ஏற்க
அம்பேத்கரை தேர்வு செய்திருந்தனர்.
ஆனால் அம்பேத்கர் அனுப்பிய உரையில் இந்து மதத்தை ஒழிக்கும் கருத்துக்களை நீக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்தனர்.
"உங்கள் கருத்தரங்குக்கு தலைமைதாங்க ஒத்துக் கொண்டதற்காக ஒடுக்கப்படும் மக்களின் நம்பிக்கை மாற்றம் குறித்த என் கருத்துக்களை நிறுத்தி வைக்கவோ அல்லது கைவிடவோ செய்வேன் என்று நினைத்தீர்களா? அப்படி நினைத்தால் அது உங்கள் தவறு" என்றே பதிலளித்தார். பின்பு அவர் தயாரித்த இந்த ஆய்வுக்கட்டுரை மக்களை சென்றடைய வேண்டும் என்று நூலாக வெளியிட்டார்.
அவர் ஏன் சாதிகளால் ஆன இந்து மதத்தை அழித்தொழிக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார் என்பதை தீண்டத்தகாதவர்கள் எப்படியெல்லாம் நடத்தப்பட்டார்கள் என்பதையும், சில வரலாற்றுச் சான்றுகள்லாலும், பல கேள்விகளை எழுப்பி அதற்கு தன் மதி நுட்பத்தால் பதில்களையும் அளித்து இந்த நூலை வாசிப்பவர்களுக்கு தன் நிலைப்பாட்டை ஒளிவு மறைவின்றி தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
"நீங்க சாதிய பத்தி பேசி பேசி தான் நிறைய பரப்புரீங்க"
"சாதியை விட எவ்வளவோ பிரச்சனை இருக்கு அதை விட்டுவிட்டு இது ஏன் பேசுறீங்க"
இதுபோன்ற சமூக பிரச்சனையை அலட்சியப்படுத்தும் கேள்விகளை கேட்பவர்களுக்கு சமுதாயம் மற்றும் மதச் சீர்திருத்தைக் கருத்தில் கொள்ளாமல் பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தை கொண்டுவருவதில் பயனில்லை, அப்படி நீங்கள் கணக்கில் கொள்ளாமல் இருந்தால் எப்படிப்பட்ட விளைவுகளை சந்திப்பீர்கள் என்பதை சில வரலாற்றுச் சான்றுகளை கூறி "சமூக சீர்திருத்தம் என்பது மனித மேம்பாட்டுக்கு அடிப்படையானது" என்று அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.
"சாதி என்பது தொழில் பிரிவினை அதில் தவறேதும் இல்லை, அவர் அவர் தொழிலை அவர்கள் பெருமையாக கருதவேண்டும்" என்ற சாதியை நியாயப்படுத்த விரும்புவோர்களுக்கு அம்பேத்கர் அளித்த பதில் இதோ
"தன் தொழிலை தானே தேர்ந்தெடுக்கும் தன்னுரிமையை அனைவருக்கும் வேண்டும். இத்தகைய தன்னுரிமையை மறுப்பது அடிமைத்தனத்தை நீடிப்பதே ஆகும் மற்றும் தொழில்துறை என்பது காலத்துக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு தனி மனிதனும் தன் வாழ்க்கைத் தொழிலை மாற்றிக் கொள்ளும் சுதந்திரம் கொண்டவனாக இருக்கவேண்டும். இல்லையெனில் ஒருவன் தன் பிழைப்பை தேடிக் கொள்வது என்பதே முடியாமல் போகும்" என்று பதிலளிக்கிறார்.
இந்துக்கள் மதமாற்றம் செய்த பின்பு கூட தனது சாதிப் பெருமையை பேசி சண்டையிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதே போல் கலப்புத் திருமணங்களுக்கு பெருவாரியான பெற்றோர்கள் அன்று முதல் இன்று வரை எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். இவர்கள் இந்த சாதிய நிலையை முழுமனதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்த மனித உலகில் கலப்பற்ற மனித இனம் ஒன்று இல்லவே இல்லை. இதுவரையில் உலகின் எல்லா பகுதிகளிலும் எல்லா இடங்களிலுமே கலப்பு இருந்து வந்துள்ளது. Human evolution was shaped by interbreed theory என்பது நாம் அறிவியல்பூர்வமாக அறிந்ததே. இதை அவர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
இவர்களின் அறிவு மதமெனும் விலங்கால் பூட்டப்பட்டுப்பட்டு இருக்கிறது.
சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் புனிதம் என்று நம்பிக்கொண்டு இருப்பவர்களிடம் நீங்கள் சாதி ஒழிக்க வேண்டும் என்றால்
அவர்கள் புனிதம் என்று நம்புகிற மதக் கோட்பாடுகளை அழிக்காமல் இது சாத்தியமாகாது.
புனிதத்தை உடைக்காமல் இருப்பின் பிற மனிதர்களை சமமாக பார்க்க முயற்சி செய்வார்களே தவிர தாழ்த்தப்பட்ட மக்களை சமமாக உணர மாட்டார்கள். ஆனால் அதே புனிதம் உடைந்துவிட்டால் அனைவருக்கும் அனைவரும் சமமாகத்தான் தெரிவார்கள்.
சாதியில் உள்ள உயர்வு தாழ்வை நீங்கள் எப்படி புரிந்து கொள்ளலாம் என்றால்,
ஒரு சாதி எந்த அளவுக்கு உயர்வானதாக இருக்குமோ அந்த அளவுக்கு அதன் உரிமைகள் அதிகமானதாக இருக்கும், ஒரு சாதி எந்த அளவுக்கு தாழ்வானதாக இருக்குமோ அந்த அளவுக்கு அதன் உரிமைகள் குறைவானதாக இருக்கும்.
இப்படி மிக முக்கியமான உரிமையான அறிவொளியை அடைய முடியாதபடி மக்களை தடுத்தது சாதியின் மிகப்பெரிய குற்றமாகும். ஒரு மனிதன் மேம்பட அவனிருக்கும் சூழல் மற்றும் கல்வி போன்ற கருவிகள் மிக முக்கியமான கூறுகள். இதை தடுத்த சாதி கேவலமானது என்று கூறுவதில் எனக்கு தயக்கமே இல்லை.
கல்வி அறிவு பெற முடியாததால்
தங்கள் விடிவுக்கான வழியைப் பற்றி எண்ணவதோ அறிவதோ கூட அவர்களால் முடியாமல் போனது. தாழ்த்தப்பட்ட நிலையில்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். அந்த நிலையிலிருந்து வெளியேறுவதற்கான வழி அவர்களுக்குத் தெரியாது. அதற்கான கருவியும் அவர்களிடம் இல்லை. இப்படி பிறப்பை அடிப்படையாகக்கொண்ட ஏணிப்படி அமைப்பே இந்த சாதி.
ஆனால் இதை பலர், மனிதனின் மேம்பாட்டை தலைவிதி தத்துவத்தோடு ஒப்பிட்டு சாதியின் வன்மத்தை கேள்வி கேட்பதில்லை.
மிக முக்கியமாக சீர்திருத்தங்களை விரும்பும் பல சீர்திருத்தவாதிகள் கூட சாஸ்திரங்களை எதிர்ப்பதில்லை. சாஸ்திரங்கள் புனிதமானவை அடிப்படையான ஆதாரம் உடையவை என்று மக்கள் நம்பும்படி விட்டுவிடுகின்றனர். அதே நேரத்தில் "மக்கள் மனிதத் தன்மையே இல்லாதவர்களாக இருக்கிறார்கள்" என்று கண்டிக்கிறார்கள். எனவே சாஸ்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கையை போக்கிக் கொள்ளாத வரை அதன் மீது கட்டமைக்கப்பட்ட தங்கள் போக்கை மக்கள் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.
யாரை வீழ்த்துவது - சாதி வெறியனையா? இந்து மதத்தையா?
சாதி என்கின்ற கண்ணோட்டத்தை இந்துகளின் மனதில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிற இந்து மதத்தின் மீதே தவறு இருப்பதாக நான் கருதுகிறேன். என்னுடைய இந்த கருத்து சரியானது என்றால் நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி சாதியைக் கடைப்பிடிக்கும் மக்கள் அல்ல சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தருகிற சாஸ்திரங்களே நீங்கள் வீழ்த்த வேண்டியவை. அதுவே உங்கள் பயங்கர எதிரி.
வேதங்களும் சாஸ்திரங்களாலும் ஆன மதத்தை அழித்து ஒழிக்க வேண்டும்.
மதமே தேவையில்லை என்று நான் கருதுவதாக யாரும் எண்ணிவிட வேண்டாம்.
மதம் கொள்கைகளால் மட்டுமே ஆனதாக இருக்க வேண்டும். விதிகளால் ஆனதாக இருக்க முடியாது. விதிகள் சமையல் குறிப்புகளைப் போல என்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்பதை மட்டுமே கூறுகின்றது. இந்து மதத்தை நான் மறுப்பதற்குக் காரணம், இரக்கம் மற்றும் மாறாத தன்மையும் அதன் தன்மைகளாக இருப்பதாலேயே நான் அதை மறுக்கின்றேன்.
" I like the religion that teaches liberty, equality and fraternity"
"சாதிகளாலான இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும்" என்று நான் கூறுகிறேன்.
நான் இப்படிக் கூறுவதன் பொருள் சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். சிலருக்கு கலகம் விளைவிப்பதாக தோன்றலாம். சிலருக்கு புரட்சிகரமானதாக தோன்றலாம்.
என் நிலைப்பாட்டை ஒளிவு மறைவின்றி தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றேன்.
இதை ஏற்றுக் கொள்வதும் விட்டுவிடுவதும் உங்களைப் பொறுத்தது.
இந்தக் கருத்துக்கள் அதிகாரம் படைத்த புகழ்படைத்த ஒருவரின் கருத்துக்கள் அல்ல இந்த நாட்டில் உள்ள ஏழை எளியவர்களின், அடக்கி ஒடுக்கப் பட்டவர்களின் விடுதலைக்காக தன் வாழ்க்கையை ஓயாத போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்ட ஒரு சாமானியனின் கருத்துக்களாக இதை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்துக்கள் என்னை வெறுக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் அவர்களுக்கு விருப்பமான மனிதன் இல்லை என்பதையும் அறிவேன். இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான் அவர்களிடமிருந்து விலகி இருக்கிறேன். அவர்களை வேதனைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. என்னுடைய இடத்தில் இருந்தபடியே என் எண்ணங்களை நான் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.
இந்துக்கள் இந்தியாவின் நோயாளிகள். அவர்களின் நோய் மற்ற இந்தியர்களின் நலத்துக்கும் மகிழ்ச்சிக்கும் ஆபத்தை விளைவிப்பதாக இருக்கிறது. இதை அவர்கள் உணரும்படி செய்து விட்டால் அதுவே எனக்குப் போதும்.
மேற்கூறிய அனைத்தும் "ஜாதியை அழித்தொழிக்கும் வழி" என்ற புத்தகத்தில் இருந்து நான் முதன்மையாக கருதும் கருத்துக்கள்.
வாழ்க சமத்துவம் வாழ்க அம்பேத்கர் !

informative
reflective
tense
fast-paced
medium-paced
reflective
medium-paced
challenging
informative
inspiring
Ambedkar was, is and will continue to be a revelation for generations to come.
The 5 star rating extends also to Arundhati Roy's essay "The Doctor and the Saint".

Some problematic stuff about aboriginal people but otherwise good
challenging
medium-paced