You need to sign in or sign up before continuing.
Take a photo of a barcode or cover
vigneshjothinarayanan 's review for:
Samskara: A Rite for a Dead Man
by U.R. Ananthamurthy
இந்த நாவல் இப்பொழுது இருக்கும் அரசியல் சூழலில் வெளியிட்டிருந்தால் கண்டிப்பாக தடை செய்ய பட்டிருக்கும். ஒரு பிராமணன் எப்படி எல்லாம் வாழ கூடாதோ அப்படி எல்லாம் வாழ்ந்த நாரப்பன் நோயினால் மரணிக்கிறான, இவரது இறுதி சடங்கை செய்வதற்கு புத்திரர்கள் இல்லை, அங்கே வசிக்கும் பிராமணர்களுக்கு தீட்டாகிவிடும் என்று சடங்கை செய்ய அவர்களுக்கு விருப்பம் இல்லை, பிராமணரல்லாதோரும் சடங்கை செய்ய கூடாது, தர்மசாஸ்திர படி என்ன செய்யலாம் என்று மூத்த சுத்த பிராமணனான பிரானேஷச்சார்யாவின் அறிவுரையை கேட்க, அவர் சாஸ்திரத்தில் இதற்கான தீர்வை கண்டு கொள்ள சிரமப்படுகிறார்.
பிணம் நாறுகிறது, சவத்தை எடுக்கும் வரையில் யாரும் அக்ரஹாரத்தில் சாப்பிட கூடாது, பசியில் வாடுகின்றனர், எலிகள் செத்து மடிகின்றன (reference to The Plague by Albert Camus) கழுகுகள் கூரை மீது அமர்ந்து எலிகளை தின்று வருகின்றனர், வெய்யில் கொழுத்துகிறது, இப்படி இருக்க பிரானேஷசார்யாவின் பிராமணியம் பரீச்சைக்கு வரும்படி ஒரு சம்பவம் நடக்கிறது, இதனால் அவர் 25 வருடங்களாக கடைபிடித்திருந்த சாஸ்த்திர சம்பிரதாயத்தை மீறுகிறார், நாரப்பனின் வாழ்க்கையை மற்றும் அவரது வாழ்க்கையை மறு பரீசீலினை செய்கிறார்.
இது பிராமண சமூகத்தின் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை சவால் செய்யும் தொடர் நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. பிரணேஷாச்சார்யா அவரது இருப்பின் அடித்தளத்தை கேள்விக்குள்ளாக்கக்கூடிய கடினமான தேர்வுகளை எடுக்க அவருக்குள் ஒரு உளவியல் போர் நேரிடுகிறது.
நாவலின் இறுதியில் அந்த ஊர் பார்ப்பனர்களையும் சந்திரியின் கதையையும் abruptஆக abandon செய்த உணர்வு ஏற்பட்டது, மற்றபடி பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல், தனிமனித ஆசைகளுக்கும் சமூகக் கடமைகளுக்கும் இடையிலான போராட்டம், அதனால் ஏற்படும் குற்ற உணர்வு அதிலிருந்து மீண்டு வருதல் என்று பல்வேறு கருப்பொருள்களை ஆராயும் ஒரு முக்கியமான நூலாக சம்ஸ்காரா அமைகிறது.