Take a photo of a barcode or cover
preethisri 's review for:
Poonachi Allathu Oru Vellattin Kathai
by பெருமாள் முருகன், Perumal Murugan
இந்தப் புத்தகத்தின் நாயகி ஒரு ஆடு. கதை முழுவதும் அவளது பார்வையில் தான் நகர்கிறது.
அவள் எங்கிருந்து வந்தாள் என்பது யாருக்கும் தெரியாது. எப்படியோ ஒருநாள் கிழவனின் வீட்டை அடைகிறாள்.
பூனாட்சி ஒரு சொட்டு பாலுக்காக ஏங்குவது,
தனது மந்தைக்குள் நுழைய போராடும் காட்சிகள்
இவை அனைத்தையும் பெருமாள் முருகன் மிக ஆழமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் பதிவு செய்துள்ளார்.
“இவள் வெறும் ஒரு ஆடுதானே, இவளுக்கு என்ன பிரச்சனை இருக்கும்?” என்ற எண்ணம் ஆரம்பத்தில் எனக்குள் தோன்றியது.
ஆனால், நாம் யாராக இருந்தாலும் சரி — ஒவ்வொருவருக்கும், அவரவர் வாழ்க்கையில், அவர்களுக்கென ஒரு தனி போராட்டம் இருக்கும் என்பதை இந்த நாவல் மிக தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
143 பக்கங்கள் மட்டுமே!
ஆனால், அந்தக் குறுகிய பக்கங்களில் சொல்லப்படும் கதையின் ஆழம் சொல்லி முடிக்க முடியாதது.
புத்தகத்தை முடித்து சில நாட்கள் கழித்த பிறகும், என் மனதுக்குள் பூனாட்சி இன்னும் நிழல்போல நின்றுகொண்டிருக்கிறாள்.
அனைவரும் கட்டாயம் ஒருமுறையாவது படிக்கவேண்டிய ஒரு வாழ்க்கைநிழலான நாவல்.