Take a photo of a barcode or cover
A review by the_imbecile_admirer
எங்கதெ by இமையம்
emotional
mysterious
fast-paced
- Plot- or character-driven? Character
- Strong character development? It's complicated
- Loveable characters? No
- Diverse cast of characters? Yes
- Flaws of characters a main focus? Yes
4.0
#333
Book 4 of 2025- எங் கதெ
Author- இமையம்
இமையத்தின் ‘எங்கதெ’ நாவல் கிராமப்புற வாழ்க்கையின் நுணுக்கங்களையும் மனிதர்களின் மனதிற்குள்ளான சிக்கல்களையும் ஆழமாக சித்தரிக்கும் ஒரு மிக முக்கியமான படைப்பு. இந்த நாவல் மனித உறவுகளின் மெய்யான தன்மையையும், சமூகத்தின் பார்வையில் அவை எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதையும் ஆராய்கிறது.
காதலுக்கு வயதில்லை என்பதை போல் தான் இதில் ஒரு வித்தியாசமான, விசித்திரமான காதல் கதை. கமலா-விதவைப் பெண்,இரண்டு பெண் பிள்ளைகள். விநாயகம்-திருமணமாகாத,வேலைக்கும் செல்லாத ஒரு ஆண். விநாயகன் கமலாவை நேசிக்கிறார், ஆனால் அவருடைய செயல்கள் மற்றும் கமலாவின் மௌனம், அவனுக்கு தனிப்பட்ட போராட்டமாக மாறுகிறது. சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகள் அவற்றின் மேல் நிரந்தர தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
இமையத்தின் எழுத்து மிகவும் இயல்பாகவும் நெகிழ்ச்சியுடனும் நிறைந்துள்ளது. இவர் கிராமப்புறங்களின் வாழ்க்கை முறையையும், அதிலுள்ள நெகிழ்ச்சியான நிகழ்ச்சிகளையும் மிகுந்த உணர்வுடன் விவரிக்கிறார்.
இருவரின் உறவினால் உண்டாகும் குழப்பங்களும், அவற்றின் பின்னணியில் உள்ள சமூகச் சிக்கல்களும், நாவலின் முக்கியத் தகவுகளாக உள்ளது.
இந்த புத்தகம் உங்களுக்குள் நிறைய கேள்வி எழுப்பும். ஒரு ஆண்-பெண் உறவு சமூகத்தால் எப்படியெல்லாம் பார்க்கப்படுகிறது, அந்த உறவில் இருக்கும் ஆண் பெண்ணின் தேவை என்ன என்ற பல பரிமாணங்களை இது காட்டுகிறது. சிலருக்கு இந்த கதை பிடிக்காமல் கூட போகலாம். எனக்கு இது பிடிக்கக் காரணம் அந்தந்த கதாபாத்திரங்களின் உண்மையும்,நியாயமும் அப்படியே எழுதப்பட்டிருக்கும் விதம் தான்.