Take a photo of a barcode or cover
A review by the_imbecile_admirer
செம்பியன் கிழாலடிகள் by
inspiring
fast-paced
- Plot- or character-driven? A mix
- Strong character development? Yes
- Loveable characters? Yes
- Diverse cast of characters? Yes
- Flaws of characters a main focus? No
4.0
#331
Book 2 of 2025- செம்பியன் கிழாலடிகள்
Author- சிரா
“அமைதி என்னும் அன்பை வைத்தே நீ செய்யும் அனைத்தையும் தனக்குள் பேரின்பம் ஆக்கி உனக்கு அதைப் பெருஞ்செல்வமாகத் தருவாள் தாய்.”
“சோழச் சூரியன்” தொடரின் மூன்றாவது பாகமாக வரும் செம்பியன் கிழாலடிகள், சிராவின் திறமையான எழுத்து மற்றும் ஆழமான கதை சொல்லும் நடையின் மூலம் ஒரு முக்கியமான வாசிப்பு அனுபவமாக விளங்குகிறது.
முந்தைய பாகத்தில் சோழர்கள் பாண்டிய மன்னன் வீரபாண்டியனை சிறைபிடிக்கும் கதையுடன் முடிவடைகிறது. இந்த பாகம் அதன் தொடர்ச்சியாக, பாண்டிய நாட்டில் அதன்பிறகு நிகழும் உத்தேசங்களையும், அதை வெற்றிகரமாக தாங்கிக் கொள்ளும் வீரபாண்டியனின் மனைவியின் சாமர்த்தியத்தையும் கூறுகிறது.
வீரபாண்டியன் இல்லாத சமயத்தில், அவரது மனைவி “செம்பியன் கிழாலடிகள்” நாடு நிர்வகிக்கும்போது அவர் எதிர்கொள்ளும் சவால்கள், மன எழுச்சிகள் மற்றும் தாய்மை, பெண் சக்தி ஆகியவற்றின் அழகான சித்திரணமாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.
வாசிக்க வேண்டிய காரணங்கள்:
1. சிராவின் மொழி வளம்
2. கதையின் வலிமையான பாத்திரங்கள்:
3. பொறியாளர்களின் படைப்பு
4. பெண்ணின் பார்வையில் கதை
சிராவின் எழுத்து நம்மை பண்டைய தமிழ் நாட்டின் அரசியல் சூழலுக்கும் சமூக கட்டமைப்பிற்கும் அழைத்துச் செல்கிறது.தாய்மை, பெண் சக்தி, மற்றும் பெண் நாடு ஆளும் தன்னம்பிக்கையை மையமாகக் கொண்ட இந்தக் கதை, நவீன பெண்களின் மனதையும் பாதிக்க வைக்கும்.சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் இடையே உள்ள சதி, தந்திரங்கள் மற்றும் இராணுவ தந்திரங்களை கையாண்ட விதம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது.
சிரா எழுத்தாளராக மட்டுமல்ல, கதை சொல்லும் கலைஞராகவும் சாதனை படைத்திருக்கிறார். பண்டைய தமிழ் நாட்டின் அரசியல் சூழல், சமூகப் பார்வைகள் மற்றும் பெண்ணின் நிலையை விறுவிறுப்பாகவும், நுணுக்கமாகவும் கையாண்டுள்ளார். இக்கதை முழுக்க முழுக்க புனைவு கதையாக இருந்தாலும், அதன் உண்மைத்தன்மை வாசகரின் மனதை தாக்கும் வகையில் உள்ளது.
ஒரு கதை சிறந்த கதையாக நிற்க வேண்டுமெனில், அந்த விவரித்தல் முக்கியம். ஆசிரியருக்கு வரலாற்றின் மீது இருக்கும் ஆர்வத்தை இது அழகாக காட்டுகிறது.
தமிழில் சிறந்த தமிழ் புனைவுகளை தேடுபவர்களுக்கும், ஒரு சுவாரஸ்யமான, உணர்வுப்பூர்வமான அனுபவத்தை விரும்புபவர்களுக்கும் “செம்பியன் கிழாலடிகள்” ஒரு சரியான தேர்வாக இருக்கும்!